உதகை, மே 18-
உலக புகழ்பெற்ற உதகை மலர் கண்காட்சி வெள்ளியன்று (இன்று) துவங்குகிறது. மலைகளின் அரசி என்று அழைக்கக்கூடிய நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 121வது மலர்கண்காட்சி வெள்ளியன்று (மே 19) துவங்குகிறது. இக்கண்காட்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். மேலும், இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங்பேடி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குநர் அர்ச்சான பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Leave A Reply