சென்னை: சென்னையில் வெயிலின் தாக்கம் 108 டிகிரியை தாண்டியதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் கடும் வெப்பம் வாட்டி எடுக்கும் நிலையில் வியாழனன்று அனல்காற்று வேகமாக வீசியது. முன்னதாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி கடந்த 2 நாட்களாகவே வெயிலின் தாக்கம்  அதிகமாகவே உள்ளது.  இந்நிலையில் வியாழனன்று 108 டிகிரி வெயில் அடித்தது. இதனால் கடுமையான அனல் காற்று வீசியது. மேலும் காலை 8.30 மணிக்கே வெப்பநிலை 98 டிகிரியாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனல் காற்று நாளை வரை வீசும். அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு  இடி-மின்னல், பலத்த சூறை காற்றுடன் கூடிய மழை பெய்யும். வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை வரை அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.