புதுதில்லி;
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 24-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 2-ஆம் தேதியும் வெளியிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தேர்வு முடிவுகளை, cbse.nic.in மற்றும் cbseresults.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், கூகுள் ப்ளேஸ்டோரில் சிபிஎஸ்இ ரிசல்ட்ஸ் ஆப்பை பதிவிறக்கி அதன் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.