விக்டஸ் டையிங் என்ற தனியார் பனியன்  நிறுவனத்தில் பணியாற்ற விருப்பம் இல்லை என சொன்ன ஒரிசா மாநில பெண்கள் மீது பொதுமக்கள் முன்னிலையில் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை- பழனி தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி என்ற இடத்தில்    விக்டஸ் டையிங்ல் என்கிற நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலத்தில் வறுமையில் உள்ள குடும்பத்தினரிடம் அட்வான்ஸ் என்கிற பெயரில் ஒரு முதலில் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த குடும்பத்தில் இருக்கும்  இளம் பெண்களை அழைத்து வந்து விக்டஸ் டையிங் நிறுவனத்தில் அடைத்துவைத்து கொத்தடிமைய் போல்  வேலை வாங்குகின்றனர்.
இந்த நிலையில் ஓரிசா மாநிலத்தில் இருந்து வேலை செய்த பெண்கள், தங்களுக்கு இங்கு வேலை செய்ய பிடிக்கவில்லை என்று லாவண்யா,கீதாஞ்சலி, ஆர்ஷா, மெரினா, அம்தா, சோனா என்ற ஆறு பெண்கள் (அனைவரும் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுமிகள்) தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு கிளம்பியிருக்கின்றனர். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த தனியார் நிறுவனத்தின் காவலாளிகள் அடித்து உதைத்திருக்கின்றனர். அதையும் மீறி தப்பி ஓடி வந்தஇளம் பெண்களை நிறுவனத்தின் இருந்த  ஐந்து பெண் காவலாளிகள் தடி மற்றும் பிவிசி பைப்களை கொண்டு  கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.
இதனால், வலி தாங்கமுடியாமல் பெண்கள் கதறியுள்ளனர்.  நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் பழனி பிரதான சாலையில் நடைபெற்ற இந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அடிவாங்கும்  பெண்களை காப்பாற்ற சத்தம்போட்டபடி அவ்வழியே வந்தவர்கள் சென்றுள்ளனர்.  இதனைக்கண்ட  நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஓடிவிட ஒருவர் மட்டும் சிக்கினார். இதனையடுத்து காட்டுமிராண்டி தனமான தாக்குதலுக்கு ஆளான பெண்களை காப்பாற்றிய பொது மக்கள் 108 அவசர ஆம்புலன்ஸ் மற்றும் மடத்துகுளம் காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது. பின்னர் பாதிகப்பட்ட பெண்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள். காயத்துடன் இருந்த பெண்களை மடத்துகுளம் அரசு மருந்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்களை கொத்தடிமை போல் நடத்தும் விக்டஸ் டையிங் (பனியன்) நிறுவனத்தை ஆய்வு செய்து  பாதிக்கபட்ட தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும். பொது இடத்தில் தொழிலாளர்களை தாக்கிய நிறுவனம் மற்றும் நபர்களை மீது கடுமையான நடவடிக்கையை அரசு தரப்பு எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் கூறுகையில், எங்களைப்போலவே இந்நிறுவனத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களையும் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவையுங்கள் என கைகூப்பி கண்ணீரோடு பொதுமக்களை கேட்டது அனைவரது கண்களையும் குளமாக்கியது. சுரண்டலின் உச்சமாய் திகழும் இந்நிறுவனத்தின் உரிமையாளரை கைதுசெய்ய வேண்டும் என பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
 

Leave a Reply

You must be logged in to post a comment.