சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக  பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல இடங்களில் வியாழனன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: