அம்ரோகா;
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டம், திகாரியா பத் பகுதியில் வசித்து வந்தவர் கைலாஷ் திகேதர் (40). பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியப் பிரமுகரான இவர், வியாழனன்று காலை அவரது வீட்டின் படுக்கை அறையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். திகேதரின் அருகில் அவரது துப்பாக்கியும் கிடந்துள்ளது.

ஆனால், அவரது உடலில் பாய்ந்திருந்த தோட்டாக்கள் வேறு துப்பாக்கியில் இருந்து வந்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக திகேதரின் சகோதரர், முன்னாள் மனைவி மற்றும் தோழியிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்,

வீட்டில் பதிவான ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்துள்ளனர். திகேதர், சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி, அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: