மும்பை: அதிவேகமாக வந்த டிரக் ஒன்று ஆட்டோவில் மோதும் போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மஹாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது, அதி வேகமாக வந்த டிரக் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அந்த டிரக் நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் சாலையை ஆக்கிரமித்து பார்கிங் செய்யப்பட்ட காரில் மோதி, நசுங்கிய ஆட்டோ சாலையில் கவிழ்கிறது. மேலும் ஆட்டோவில் இருந்த ஒருவர், வெளியே தெறித்து விழுந்த நிலையில், அதில் பயணித்த மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.