புதுதில்லி,
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளின் உள்ளாடையை அகற்ற வற்புறுத்திய விவகாரம் குறித்து சிபிஎஸ்இக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த 7ம் தேதி நடை பெற்றது. இந்த தேர்வை நடத்திய சிபிஎஸ்இ ஆணையம் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
இதனிடையே நீட் தேர்வில் கேரள மாநிலம் கண்ணூர் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து சில தேர்வுக் கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வ மிகுதியால் இவ்வாறு நடை பெற்று விட்டது என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்தது. இந்நிலையில் மாணவிகள் மீதான அத்துமீறலைத் தொடர்ந்து மனித உரிமை ஆணையம் சிபிஎஸ்இக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply