ப.சிதம்பரம் அவர்கள் ஊழல்களுக்கு அப்பாற்பட்டவர் என்றெல்லாம் நான் சொலவரவில்லை. ‘நோவார்டிஸ்’ மருந்துக் கம்பெனில்லு அவரது மனைவி நளினி சிதம்பரம் வழக்குரைஞராக இருந்தது தொடர்பாக நான் எனது மருத்துவநலப் பிரச்சினைகள் நூலில் எழுதியுள்ளேன். கார்த்திக் சிதம்பரம் மீது எனக்கு இம்மியும் மரியாதை கிடையாது.

இவ்வளவுக்கும் அப்பால் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டி உள்ளது. அவரது மனைவியும் மகனும் எப்படியோ அவரைப் பொருத்த மட்டில் உறுதியாக இந்துத்துவத்தை விமர்சிப்பவர். அவரது கருத்துக்கள் ரத்தினச் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற்போல அவரது விமர்சனங்கள் இருக்கும். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது ‘காவி பயங்கரவாதம்’ எனக் குறிப்பிட்டமைக்காக பெரிய அளவில் இந்துத்துவவாதிகள் அவரை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தியததும், காங்கிரசே அவரைக் கவிட்டு வேடிக்கை பார்த்ததும் நினைவிருக்கலாம்.

பா.ஜ.க அரசு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது அதனால் கருப்புப் பணத்தை வெளிக்கொணரவெல்லாம் இயலாது என்பதை அவர் விளைக்கிய பாங்கு அது ஒரு அபத்தமான நடவடிக்கை என்கிற உண்மை வெளிப்பட ஏதுவாகியது. சென்ற ஆண்டு அவரது கட்டுரைத் தொகுப்பு டெல்லியில் வெளியிடப்பட்டபோது அவர் பேசிய பேச்சு மிக முக்கியமானது. நான் கூட அதை மொழியாக்கி இந்தப் பக்கங்களில் பகிர்ந்திருந்தேன்.

பா.ஜ.க அரசு இன்று மேற்கொண்டுள்ள இந்த சோதனை நடவடிக்கை நூறு சதம் இதற்கான பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப் படுவதுதான். காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவது என்கிற ஆர்.எஸ்.எஸ் முழக்கத்தின் ஓர் அங்கம் இது. அவர்கள் உருவாக்க நினைக்கும் ‘இந்து ராஷ்டிரம்’ எனும் திட்டத்திற்கு ஏதோ ஒரு வகையில் காங்கிரஸ் பெருந்தடையாக உள்ளது என்பதே இதன் அடிப்படை.

இன்று நடக்கும் இந்தச் சோதனைகள் ஊழலை ஒழிக்கும் நோக்கில் என எவனாவது சொன்னால் அவனை விட முட்டாள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது.

  • Marx Anthonisamy

Leave A Reply