சண்டிகர் ,

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண்ணை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

பஞ்சாம் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கம்பி வேலிகளை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றார். இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தும் , அவர் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளார். இதில் சந்தேகமடைந்த வீரர்கள் அந்த பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: