சிவகங்கை ,

சிவகங்கை மாவட்டம் திருபுவணம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு கோவிந்தாபுரம் , வள்ளுவர் தெருவை சேர்ந்த விஜய் ஆனந்த(50) , வேளாண் துறையில் பணிபுரியும் இவர் தனது மனைவி பாக்கியலட்சுமி , மகன் முத்துராமு , உறவினர் ஜெயபாரதி ஆகியோருடன் ராமேஸ்வரம் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் திருபுவணம் அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்,  இந்திரா நகர் ஒத்த வீடு என்ற இடத்தில் வரும் போது, எதிரே வந்த அரசு  பேருந்து மீது மோதியது.  இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.