கரூர் ,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகினர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 11 பேரில் 7 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  காரில் பயணம் செய்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேளாங்கண்ணி சென்று ஊர் திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.