விருதுநகர்;
விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி ,பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்த போது கண்டறியப்பட்டு, குழந்தை தொழிலாளர் பள்ளியில் சேர்க்கப்பட்டு, பின்பு, முறைசார் பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்து 30 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் 1987 முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 9 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில், செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு சிறப்பு பயிற்சி மையங்களில் 5 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது.
பின்னர், இவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 தேர்வு எழுதிய 30 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 4 மாணவ, மாணவிகள் 1000த்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவ, மாணவிகளின் பெயர் விபரம் வருமாறு:
சிவகாசி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மகேஸ்வரி, சாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், அதே பள்ளியைச் சேர்ந்த கார்த்திக் குமார், பாறைப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம், அதேபள்ளியைச் சேர்ந்த காளீஸ்வரி மற்றும் பவித்ரா, ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த வெற்றி கொண்டான், அதே பள்ளியைச் சேர்ந்த முனீஸ்வரி, லட்சுமி, நந்தினி,
சாத்தூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த குணசக்தி, திருத்தங்கல் எஸ்.எம்.ஜி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பவ்யா, சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாரிச்செல்வம், திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கவுசல்யா, மங்களம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பஞ்சவர்ணம், திருநெல்வேலி புனித ஜான் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணன், திருவில்லிபுத்தூர் சிஎம்எஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.