தில்லி: எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களும் ஒப்புகை சீட்டுகளுடன் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமே நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பிய எதிர்க்கட்சியினர், அதை நிரூபித்து காட்டவும் முயற்சித்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.

இந்த ஆலோசனை வெள்ளியன்று நடைபெற்றது. இதில் 7 தேசியக் கட்சிகளும், 35 மாநிலக் கட்சிகளும் பங்கேற்றன. சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா என சவால் விடுத்தார். மேலும் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் ஒப்புகை சீட்டுகளுடன் கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயண்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.