சண்டிகர்,
பெண் ஆசிரியர்கள் ஜூன்ஸ் டாப்ஸ் போன்ற ஆடைகளை அணிய தடைவிதித்து பஞ்சாப் மேல்நிலைக் கல்வியின் உதவி இயக்குநர் அமர்பீர் சிங், உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப்  ‘அரசு பள்ளிகளில் பணிப்புரியும் பெண் ஆசிரியர்கள் பணிக்கு வரும் போது ஜீன்ஸ், டாப்ஸ் போன்ற அநாகரீகமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது. பஞ்சாபி கலாச்சார ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். மேலும் முழுமையாக உடலை மறைக்கும்படி ஆடை அணிந்து வர வேண்டும்” என்று மேல்நிலை கல்வி உதவி இயக்குநர் அமர்பீர் சிங் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஆண் ஆசிரியர்களின் ஆடைகளைக் குறித்து எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: