பெங்களூரு,
ஓசூர் சாலையில் மேம்பால சுவரில் மோதி விழுந்த ஐடி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் பிரவீன் மகபத்ரா (28). இவர் எலக்ட்ரானிக் சிட்டியை அடுத்த டொட்டாதொகுர் பகுதியில் கடந்த ஓராண்டாக தங்கியிருந்தார். இவர் ஒயிட்ஃபீல்டில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருந்து அதிகாலை 6.15 மணிக்கு இருசக்கர வாகனத்தில் தன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஓசூர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் செல்லும் போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி, 30 அடிக்கு கீழே விழுந்துள்ளது.
இந்த விபத்து பெங்களூரு பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் நிகழ்ந்துள்ளது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பிரவீனின் உடலை மருத்துமனைக்கு கொண்டு சென்ற காவல்துறையினர் அவரது வீட்டிற்கு தகவல் அனுப்பியுள்ளனர். இச்சம்வம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.