இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வெள்ளியன்று (மே 5) ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டம் சார்பில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டேனியல் ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில இணைச் செயலாளர் கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன், டிஎம்எஸ் பகுதி தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: