சிவகங்கை ,

மானாமதுரையை சேர்ந்த பெண் காவலர் அமுதா செல்வி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மானாமதுரைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன். முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி அமுதா செல்வி(40).திருச்சி ரயில்வேயில் காவலராக பணியாற்றி வருகிறார். அமுதா செல்வி, கடந்த 4 மாதங்களாக மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் தனியாக இருந்த அமுதா செல்வி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து மானாமதுரை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.