சென்னை, மே 2-
அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை பகட்டான பேச்சுக் கள் மூலம் மறைக்காமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறை வேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 73 நாட்களில் ஆயிரத்து 570 கோப்பு களில் கையெழுத்துப் போட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகள் தற்கொலை செய்ய வில்லை என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திற்கான கோப்பிலும் முதலமைச்சர் கையெழுத்து போட்டிருப்பார் என நம்புவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் பேசியதி லிருந்தே அந்த கோப்புகள் வழக்க மானவை தான் என்பதும், எந்த வொரு முக்கிய திட்டங்கள் சார்ந்த கோப்புகளும் இல்லை என்பது தெரிவதாக கூறியுள்ள ஸ்டாலின், தமிழர் கலாச்சார பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்து போட்டுள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கமான கோப்புகளில் கையெழுத்துப் போட்டதை, நதிநீர் இணைப்பு, போக்குவரத்து, மெகா கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு போடப்பட்ட கையெழுத்துப் போன்று மாயத்தோற்றத்தை உருவாக்கி, முதலமைச்சர் பேசி யிருப்பது வெறும் விளம்பரத்திற்கு மட்டுமே உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து துறைகளிலும் ஊழல் படிந்து விட்ட நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க முதலமைச்சர் கையெழுத்துப் போட்டிருந்தால், அதை வரவேற்று இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்து 2 மாதங்களாகும் நிலையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளை விவாதிக்க சட்டமன்றத்தைக் கூட்டவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை பகட்டான பேச்சுக்கள் மூலம் மறைக்காமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்கு தனது கையெழுத்தை முதலமைச்சர் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.