ஆம்ஸ்டர்டாம், மே 2-
‘ஓ’ குரூப் ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என புதிய தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பு கொடிய நோயாகும். அதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உணவுப்பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் எந்த வகை ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் ஏற்படும் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நெதர்லாந்தில் குரோனிங் ஜென் என்ற இடத்தில் உள்ள தேசா கோலே பல்கலைக்கழகத்தின் மருத்துவ மைய நிபுணர்களின் ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.அதில் ‘ஓ’ குரூப் ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என தெரிய வந்துள்ளது. அதே நேரம் ஏ, பி வகை ரத்த பிரிவினருக்கு 9 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மாரடைப்பு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.