1922இல் லெனின் நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும் அவரது திடசித்தமும் மனத்தெளிவும் கூர்மதியும் நம்பிக்கையும் அணுவளவும் குறையவில்லை. சோவியத் யூனியன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும், நாட்டில் சோஷலிசத்தை நிர்மாணிக்கும் வாய்ப்புகளையும் பற்றியே அவர் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

படுத்த படுக்கையாக இருந்த போதிலும், இதில் அவர் அளவில்லாத அக்கறை செலுத்தி வந்தார். லெனின் தம்முடைய நோய் மிகவும் அபாயகரமானது என்பதை உணர்ந்திருந்தார்; அது எந்த விநாடியிலும் தனக்கு மரணத்தை விளைவிக்கக் கூடும் என்று அவரே பல சந்தர்ப்பங்களில் டாக்டர்களிடம் கூறவும் செய்தார். 1922 டிசம்பர் 23ஆம் தேதி மிகவும் முக்கியமான விஷயம் குறித்து அவர் சொல்லச்சொல்ல ஒரு சுருக்கெழுத்தர் எழுதிக் கொண்டார்.

2017 ஆம் ஆண்டு மேதினத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழாவில் கொண்டாடப்பட்டுள்ள மேதினம் இது. உலகெங்கிலும் தொழிலாளர் வர்க்கம் பெரும் உற்சாகத்துடன் இந்த மே தினத்தை கொண்டாடியது. குறிப்பாக ரஷ்யத் தொழிலாளர் வர்க்கம் புரட்சியின் மகத்தான தலைவர்கள் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் படங்களை ஏந்தியவாறு, செங்கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு, வண்ண வண்ண பலூன்களை நகரெங்கும் பறக்கவிட்டவாறு மாஸ்கோ மாநகரின் செஞ்சதுக்கத்தில் மே தினத்தை கொண்டாடினர். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், ரஷ்ய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, பல்வேறு துறை தொழிற்சங்கங்கள், ஓய்வு பெற்ற மூத்த போர்வீரர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பு அரசியல் செயல்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் செஞ்சதுக்கத்தை நோக்கி ஆயிரமாயிரமாய் அணிதிரண்டனர். ஒரு பேரணியில் மாஸ்கோ மாநகர மேயர் செர்ஜி சோப்யானின் தலைமையேற்று வந்தார். ஒரு பேரணிக்கு தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மிகையீல் சம்கவ் தலைமையேற்றார். மாஸ்கோ மட்டுமின்றி ரஷ்யாவின் அனைத்து நகரங்களிலும் பிரம்மாண்டமான மேதினப் பேரணிகள் நடைபெற்றன. லட்சோப லட்சம் மக்கள், ‘கவுரவமான வேலை, ஊதியம் மற்றும் வாழ்க்கை’ என முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். 

 

இவ்வாறு செய்ய தம்மை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று மறுநாளும் லெனின் வற்புறுத்தினார். டாக்டர்கள் இதை ஆட்சேபித்தனர். அப்போது லெனின் கூறியதாவது; “தினமும் டைரி எழுத சிறிது நேரமாவது என்னை அனுமதியுங்கள்; இல்லையேல் எந்த சிகிச்சையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்.”லெனினுக்குச் சிகிச்சை அளித்து வந்த டாக்டர்கள் குழுவின் தலைவரான பேராசிரியர் பெஸ்டர் பின் கண்டவாறு மிகப் பொருத்தமாகக் குறிப்பிட்டார். “வேலைதான் அவருக்கு வாழ்க்கை,சோம்பேறித்தனம் மரணம்.” ஒவ்வொரு நாளும் ஐந்து முதல் பத்து நிமிடம் சொல்லச்சொல்ல மற்றவர்கள் எழுதிக் கொள்வது என்று முடிவானது.

லெனினது அசாத்திய நெஞ்சுரமும் தாம் சுமந்துள்ள மாபெரும் பொறுப்பை அவர் மிக நன்றாக உணர்ந்திருந்ததுமானது வலியின் வேதனையையும் நோயின் உபாதையையும் சகித்துக் கொள்வதற்கும், மனித சக்தியால்முடியக்கூடியதற்கும் அதிகமாக சாதிப்பதற்கும் வேண்டிய வலிமையை அவருக்கு அளித்தன. 1992 டிசம்பர் 23க்கும் 1923 மார்ச்சுக்கும் இடைப்பட்ட இரண்டு மாதங்களுக்கும் சற்று அதிகமான காலத்தில் அவர் ஓர் அருஞ்சாதனை புரிந்தார்.

சோஷலிசத்தை எவ்வாறு நிர்மாணிப்பது எனும் அப்போதைய மிக முக்கிய பிரச்சனை குறித்து பல கட்டுரைகளையும் கடிதங்களையும் சொல்லச் சொல்ல எழுதச் செய்தார். நாட்டின் தொழில்துறை அடித்தளத்தைத் தோற்றுவிக்க வேண்டிய தலையாய முக்கியத்துவத்தை பல சந்தர்ப்பங்களில் லெனின் வற்புறுத்தினார். “சொற்பமே ஆயினும் சிறந்தவையே நன்று “என்று தமது கடைசிக் கட்டுரையில் இந்த பிரச்சனை குறித்து தெளிவாக எழுதினார்.

இலட்சக்கணக்கான விவசாயிகளை சோஷலிச நிர்மாணத்தில் ஈர்ப்பதும்,அவர்கள் தனிப்பட்ட சிறு விவசாயத்திலிருந்து பெருவீத கூட்டு விவசாயத்திற்கு மாறுதலும் ஒரு சோஷலிசப் பொருளாதாரத்திற்கான அஸ்திவாரங்களைக் கட்டும் மிகக் கடினமான பணிகளில் ஒன்றாகும் என்று லெனின் கருதினார். கூட்டு விவசாயத்திற்கு மாறிச் செல்லும் பாதை விவசாயக் கூட்டுறவுகள் மூலமே அமைந்துள்ளது என அவர் நம்பினார். இது தொடர்பாக “கூட்டுறவு குறித்து” எனும் முக்கியக் கட்டுரையை எழுதினார். மிக எளிதான மிகச் சுலபமான விவசாயிகள் பெரிதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைகள் மூலமே இந்த மாற்றம் சாதிக்கப்பட வேண்டும் என்று லெனின் வற்புறுத்தினார்.

விவசாயத்தைத் தொழில்மயமாகவும் கூட்டுறவுமயமாகவும் ஆக்குவது இவ்வியக்க நிகழ்வுகளில் உழைப்பாளிகளின் பங்கேற்பைப் பொறுத்ததே. கடந்த காலம் விட்டுச் சென்ற தீமைகளை, சீர்கேடுகளை, அனாச்சாரங்களை, குப்பைகளை ஒழித்துக் கட்டுவது அன்றைய மிக அவசிய அவசரப் பணியாக இருந்தது. “ஒரு டைரியின் ஏடுகளிலிருந்து” என்ற கட்டுரையில் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வழிகளை லெனின் எடுத்துரைத்திருந்தார். சோவியத் யூனியனிலுள்ள பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களிடையே சமத்துவ உறவுகளை நிறுவுவதும் மிகவும் முக்கியமானது என லெனின்கருதினார்.

தேசங்களின் சட்ட ரீதியான சமத்துவத்தைக் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கும் அடிப்படையில் இந்த உறவுகள் அமைந்திருப்பது மட்டும் போதாது; பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலும் கலாச்சார ரீதியிலும் அதிகம் வளர்ச்சி அடைந்த தேசங்கள் வளர்ச்சி குன்றிய தேசங்களுக்குத் தன்னலமின்றி உதவி செய்யும் அடிப்படையிலும் இந்த உறவுகள் அமைந்திருக்க வேண்டும் என சுட்டிக் காட்டினார். லெனினது கடைசி நூல்கள் அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. சோவியத் நாட்டில் சோஷலிச மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான திட்டம் அவற்றில் பொதுமைப்படுத்தப்பட்ட வடிவத்தில் அடங்கியுள்ளது எனின் மிகையன்று.

(ஆதாரம்: லெனின் போராட்ட வாழ்க்கையில் சில ஏடுகள்)

Leave a Reply

You must be logged in to post a comment.