வாசலுக்கு வந்த மஞ்சு கண்ணுக்கு நிலா பெருசா தெரிஞ்சுது.அம்மா இன்னைக்கு பௌர்ணமின்னு சொன்னாங்களேஓ அதான் நிலா அம்மா சுடற தோசை மாதிரி வட்டமா இருக்குநிலாவைச் சுத்தி ஒரு ஒளிவட்டம் கூட தெரியுதேஎன்ன இதுவெளிச்சம் பளிச்சுனு இல்லைசரிசரிநிலாவைச் சுத்தி திட்டுதிட்டா சாம்பல் கலர்ல மேகமிருக்கு அது கலைஞ்சாதான வெளிச்சம் சூப்பரா இருக்கும்னு யோசிச்சிட்டு இருந்த மஞ்சுவோட எண்ணம் அங்க சுத்தி இங்க சுத்தி அவளைப் பத்தின எண்ணங்களா மாறிடுச்சு. அவ சின்ன பொண்ணுதானஅதான் அவ எண்ணங்களும் அவ ஸ்கூல சுத்தியே இருந்துச்சிஉதாரணத்துக்காக சில சமயம் தமிழ் டீச்சர் சந்தோஷத்துல முகம் பூ பூத்த மாதிரி இருக்குனு சொல்லுவாங்க .அது மாதிரிதான் நானும்பூ போல சிரிச்சுட்டு இருந்தா கலா அத்தை என்கூட இருக்கறாங்கன்னு அர்த்தம்.ஆனா சில நேரம் பேசவே முடியாம கஷ்டமா இருக்கும்அப்ப வெளிச்சம் குறைஞ்ச இந்த நிலா மாதிரி இருப்பேன்இப்ப நான் அப்பிடித்தான் இருக்கேன்.

ஏன்னாநேத்து எங்க பள்ளிக்கூடத்துல சுதந்திர தின பேச்சுப் போட்டிக்காக கிருஷ்ணன் லீலை பத்தி சொல்லிக் குடுத்தாங்கஅந்தன்னைக்கு மட்டும் ஏதாச்சும் டிவில காட்டுற காந்திதாத்தா காட்டுறதை அப்பா அடையாளம் காட்டி சொல்லிக் குடுப்பாருஅவர் மாதிரி இவரும் சுதந்திரப் போராட்டத்துல கலந்து கிட்டவர்னு நெனைச்சேன்ஆனா,எங்க மிஸ் கிருஷ்ணன் வெண்ணை தின்ன வாயைத் திறந்தா பூமி சுத்தறது தெரியும்ஏன்னா அவரு சாமின்னாங்க.’ அவர பத்தி எதுக்கு பேசணும்னு கேக்க முடியலைஅப்பா மடில உக்காந்து டிவில பார்த்த டிஸ்கவரில பூமி சூரியன் கிரகங்கள்னு பல விசயம் விளக்கத்தோட காட்டினாங்கஅதுல இந்த விசயம் எங்கயும் இல்லைஅப்பாகிட்ட இதை சொல்லி விளக்கம் கேட்டா டென்சன் ஆகிறார் பேசாதே அமைதியா டிவி பாருங்கிறாரு ‘.

கிருஷ்ணன் எல்லா நேரமும் ஓயாம குறும்பு செய்வான்னு சந்தோசமா சொல்லிக் குடுத்தாங்கஅதே மிஸ் கிளாஸ் ரூம்ல நாங்க கொஞ்சம் அசைஞ்சாக் கூட‘ என்ன குறும்புசும்மா இருக்க மாட்டியான்னு உள்ளங்கைல குச்சியால அடிக்கிறாங்க.

கிருஷ்ணன் கோபிகா ஸ்த்ரீகளோட சேலைகளை அவங்க குளிக்கறப்போ ஒளிச்சி வைச்சதை அவரோட விளையாட்டுனும்அவனை கும்பிட்டா சேலைகளை திருப்பி குடுத்துருவாருன்னும் சொல்லித் தந்தாங்க . ‘அதை வைச்சு பசங்க எங்க கிட்ட விளையாண்டா என்ன செய்யறதுன்னு புதுசா எங்க கிளாஸ்ல வந்து சேர்ந்திருக்கிற சுகந்தி கேட்டாள் .அவளை அதிகப்பிரசங்கி எதுத்து கேள்வி கேப்பியா? ‘ன்னு முட்டி போட வெச்சுட்டாங்கஎனக்கும் இப்பிடியெல்லாம் கேக்க தோணிச்சு ஆனா பயமா இருந்துச்சுஅதனால அமைதியா இருந்துட்டேன்.

வீட்ல அம்மாகிட்ட கேக்கக் கூட பயம்தான் .ஏன்னா எதாச்சும் கேட்டா நாளைக்கு போற வீட்லயும் இப்பிடித்தான் கேள்வி கேட்டு மானத்தை வாங்குவியான்னு திட்டுவாங்க தம்பிக்கு எப்பவுமே என்னை அடிச்சு விளையாடறது தான் பிடிக்கும்.ஆனா கலாஅத்தை அப்பிடியில்லைஅவங்களுங்கூட வேற ஸ்கூல்ல மிஸ்தான்ஆனா யாரையும் பயப்படுத்தாத மிஸ்என்ன கேள்வி வேணா கேக்கலாம்திட்டாம பதில் சொல்வாங்கஎதைப் பேசினாலும் ரொம்ப அழகாப் பேசறன்னு பாராட்டுவாங்கஅது எனக்கு ரொம்ப புடிக்கும்இந்த உலகத்துலயே எனக்கு பெஸ்ட் பிரெண்டுன்னா அவங்கதான்.

எங்க வீட்டு செல்லம் டாமிஎன்கூடத்தான் அதுவும் வளர்ந்துச்சின்னு நாங்க வளர்ந்த கதையை அத்தை சொன்னாங்க.டாமி பொறந்து கண்ணு முழிச்சவுடனே அதோட அம்மாகிட்ட இருந்து பிரிச்சு எடுத்துட்டு வந்தாங்களாம்குட்டியா இருந்தாலும் நல்லா குடுகுடுன்னு ஓடறப்ப அது வர்ற வேகத்துக்கு மத்தவங்க பயந்தாங்கன்னுசுதந்திரமா ஓட முடியாத மாதிரி சங்கிலி வாங்கி கட்டிப் போட்டாங்களாம்.

நானும் கூட பொறந்தவுடனே குட்டியா அழகா இருந்ததால எல்லாரும் கையில எடுத்து கொஞ்சுவாங்களாம்கொஞ்சம் வளர்ந்து தத்தி தத்தி நடக்கறப்ப என்கூட அம்மாவும் சேர்ந்து நடப்பாங்களாம்அம்மா சீலைக்குள்ள புகுந்து ஒளிஞ்சி நான் கண்ணா மூச்சி விளையாடறதை பார்த்து சிரிப்பாங்களாம்அம்மாஅப்பான்னு கொஞ்சி கொஞ்சி பேசறதை ரசிப்பாங்களாம் .கேட்டுக்கு வெளிய நான் போக ஆரம்பிச்சதும் தான் என்னை உள்ளுக்குள்ளயே வெச்சு பாத்துகிட்டாங்களாம்நான் எல்கேஜில சேந்ததுமே என்னை அங்க இங்க ஓடக் கூடாதுஅப்பிடி இப்பிடி உக்காரக் கூடாது .பசிக்குதுன்னு சொன்னப்பவெல்லாம் பால் பிஸ்கட்னு சாப்பிட்டு இருந்த நான் இப்ப எனக்கு பசிக்குதுன்னு சொன்னா இந்த நேரம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க அதையெல்லாம் மறந்தா ஸ்கூல்ல அடிச்சாங்ககேள்வியே கேக்காம சொன்ன பேச்சை கேட்டாத்தா ஸ்வீட் கேர்ல்னாங்க வீட்ல யாராவது வந்தா ரைம்ஸ் சொன்னா தான் நல்ல புள்ளைன்னு தட்டிக் குடுத்தாங்க.

நான் வளர வளர என்னை கண்ட்ரோல் பண்றதும் அதிகமாயிடுச்சுகையொடியற மாதிரி ஹோம்வொர்க் வேறகை வலிக்குதுன்னு சொல்லி நானும் கொஞ்சம் நேரம் அம்மாவோட உக்கார்ந்து சீரியல் பாத்தாக் கண்டுக்க மாட்டாங்க.விளையாடப் போனேன்னா அவ்வளவுதான்அம்மாவுக்கு கோபம் வந்துடும்சும்மாவே இருக்கறபடிக்க மாட்டியா போய் படிபடின்னுவாங்க.

இப்ப நான் அஞ்சாம் வகுப்பு படிக்கிறேன் அரட்டைன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்நான் பாக்குற பெரியவங்க எல்லாம் நெறைய பேசறாங்க .ஆனா நா பேசினா தப்புங்கிறாங்க பக்கத்து ஸீட் காவ்யாகிட்ட சந்தேகம் கேட்டதை அரட்டைனு புரிஞ்சு டீச்சர் சாக்பீஸை தூக்கி வீசினாங்க .அது காவ்யா மேல விழுந்துச்சிஅதனால அவ எம்மேல கோச்சிகிட்டு என்கூட கா விட்டுட்டாஸ்கூல்ல கண்காணிப்பு காமிரா வேற வெச்சு நாங்க யாரு யார் கூட பேசறோம்னு பாக்கிறாங்கபசங்க கூட பேசிட்டா எங்களுக்கு தெரியாத விசயத்தையெல்லாம் சொல்லி திட்டறாங்கநா பாத்து பழகின சீரியல்ல பேசற மாதிரியே இருக்கும் .இதை பத்தியெல்லாம் அம்மாகிட்ட பேசினா அவ்வளவுதான்அங்க இங்க தேடி பீஸ் குறைவா நல்ல ஸ்கூல்ல சேர்த்தா நீ இல்லாத குறையெல்லாம் சொல்லுவியாம்பாங்க உடம்பு உப்புக் கண்டம் ஆயிடும் !

ஸ்கூல்ல விளையாட்டு பீரியட்லயும் விளையாட விடாம ,அப்பப்போ கணக்கு டீச்சர் வந்திருவாங்கவீட்ல அம்மா அக்கம்பக்கத்துல பசங்க குடியிருக்காங்ககாலம் ரொம்ப கெட்டுக் கிடக்குநீ வீட்டுக்கு வெளில விளையாடப் போனா உன்னை பாத்துக்க முடியாதுவீட்டுக்குள்ளயே எதாச்சும் விளையாட முடிஞ்சா விளையாடுங்கிறாங்க எனக்கு பிரெண்ட்ஸோட விளையாடறது ரொம்ப பிடிக்கும்வீட்டுக்குள்ள எந்த பிரெண்ட்ஸோட விளையாட முடியும்வெளிலதான் கொஞ்சம் இடம் இருக்குஅங்க இருந்த ஒரு வீடு காலியா இருந்தப்ப விளையாண்டிருக்கேன்ஜாலியா இருக்கும் ஆனா இப்ப தம்பி மட்டும் எனக்கு கொக்காணி காட்டிட்டு வெளில போயி ஆசை தீர விளையாடிட்டு வருவான்அவனை மட்டும் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க.

இதைப்பத்தியெல்லாம் என்னால அத்தை கிட்ட மட்டும்தான் பேச முடியுது.அதனால தான் போன தடவை அத்தை வந்தப்பநான் கூட டாமி மாதிரி ஆய்ட்டனான்னு‘ கேட்டேன்ஏன்னா நானும் பலநேரம் வீட்டு கதவுக்கு உள்பக்கமா நின்னுதான் வானத்தைப் பாக்குறேன்டாமி என்காலடில படுத்துட்டு கதவு சந்துல தலைய நுழைச்சி வேடிக்கை பார்க்குது. ‘நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான்னு நெனைக்காதே அதுக்கு பேச தெரியாதுஇப்பிடியெல்லாம் நினைக்க தெரியாதுபசிக்கு சோறு இருந்தாப் போதும்ஆனா உன்னால நினைக்கவும்பேசவும் முடியும் .அதனால இதைப் பத்தி நீ தொடர்ந்து நெனைச்சு யோசிதைரியமா பேசுஒரு நோட்டு தரேன்அதுல உன் எண்ணத்தையெல்லாம் எழுதுஇந்த வயசுல சில பிள்ளைக கதைகூட எழுதறாங்கன்னு சொல்லி என்னை யோசிக்க சொன்னாங்க . ‘அத்தை மாதிரி எல்லாரும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!

யோசிச்சபடியே வானத்தை அண்ணாந்து பார்த்தாள்கொஞ்சம் கொஞ்சமா மேகம் கலைஞ்சு நிலா பளிச்சுனு தெரிஞ்சுது.எதிர்ல அத்தையோட புடவை கலர் தெரிய அதான் இந்த வெளிச்சமான்னு டாமியைப் பாத்து சிரிச்சாள்இனி எல்லாம் சரியாயிடும்கிற மாதிரி டாமியும் பதிலுக்கு வாலாட்டி சிரிச்சுது.

ஆர்.செம்மலர்

Leave a Reply

You must be logged in to post a comment.