சிவகங்கை;
சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற இடத்தில் மத்திய தொல்லியல் துறை நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாரய்ச்சியில் வருகிறது. கிமு 2-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட அறிய பொருட்கள் கிடைத்துள்ளன.

எதிர்ப்பு;                                                                                                                                                                                     கடந்த சில மாதங்களாக எந்த வித ஆய்வும் செய்யாமல் இருந்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.கடும் எதிர்ப்பால் கலங்கிப்போன மத்திய கலாச்சாரத்துறை  அமைச்சர் மகேஷ் சர்மா இன்று மதுரை வந்தார்.

கீழடி வந்த மத்திய கலாச்சாரத்துறை  அமைச்சர் மகேஷ் சர்மா அளித்த பேட்டியில்;                                                                 “ 2ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து ஆவணம் வெளியிடப்படும் எனவும்,தொல்லியல் துறை இயக்குனர் அமர்நாத் பதவிக்காலம் முடிந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், புதிய தொல்லியல் துறை இயக்குனர் ஸ்ரீ ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது புதிய இயக்குனர் நியமிப்பிக்கப்பட்டுள்ளதால், மேலும் 3 ஆண்டுகள் ஆய்வு செய்யப்படும் என்றும், கீழடியில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்” என உறுதியளித்துள்ளார் .

Leave A Reply

%d bloggers like this: