மதுரை;

                             மருத்துவ மேற்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரி தமிழ் நாடு முழுவதும்  மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வியாழன் அன்று  பிற்பகல் இராஜாஜி மருத்துவமனை பனகல் சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் அரசு  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் காலை முதல் தர்ணா ஈடுபட்ட மருத்துவர்கள், பிற்பகலில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எதிரேயுள்ள சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து தடைபட்டது.

                 
மத்திய-மாநில அரசுகளால் பறிக்கப்பட்ட சலுகையை மீண்டும் அறிவிக்கும்  வரை  பணி புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

Leave A Reply