உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்ரவர்த்தி  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்திருக்கிறார். இதுவர் நடித்த படங்கள் ஆயிரத்தை தாண்டிய நிலையில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். கடந்த  3 ஆண்டுகளாக உடல் நலக்குறைவிற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்  சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மனைவி பெயர் கர்ணப்பூ…அவருக்கு சரவணன் சண்முகப்பிரியா என்கிற மகன் மகள் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: