ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு; 20 ஆண்டு காலம் நடந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய சொத்துக் குவிப்பு வழக்கு சாதாரணமானதல்ல. அதன்விளைவுகள் சட்டப்பூர்வமாகவும், நாட்டிற்குள்ளும் பரந்த தாக்கமுடையது, கடுமையானதுமாகும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அரசு ஊழியர் வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துக்களைக் குவிப்பது சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு, ஒரு சாதாரணக் கிரிமினல் வழக்கிலிருந்து சற்றே வித்தியாசமான அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.
வருமானத்திற்குப் பொருந்தாத சொத்துக்களின் வழக்கில் ஓர் அரசு ஊழியர் சட்டத்திற்குப் புறம்பாக செல்வத்தைக் குவிக்கிறார் என்பது குற்றச்சாட்டாகும். சட்டத்தின் குறிக்கோள் குற்றமிழைத்தவரைத் தண்டிப்பது மட்டுமல்ல, மாறாக குற்றவாளி அல்லது அவர்களது சட்டப்பூர்வமான பிரதிநிதிகள் அவ்வாறு சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்காமல் பார்த்துக் கொள்வதுமாகும்.

ஜெயலலிதா மரணம்;                                                                                                                                                                                   முதலமைச்சர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 அன்று காலமானார். சட்டத்திற்குப் பொருந்தாத சொத்துக்குவிப்பு வழக்கில், 2016 ஜூன் 7-ஆம் தேதி வழக்கு விசாரணை அனைத்தும் முடிவுக்கு வந்ததற்குப் பின்னர், ஆறுமாதங்களுக்கு முன்னரே தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 14-ந்தேதி உச்சநீதிமன்றம் பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற மூவரையும் -தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து- வி.கே. சசிகலா, ஜெ. இளவரசி, வி. என். சுதாகரன் ஆகியோரை சிறைக்கு அனுப்பியது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா காலமாகி விட்டதால் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் முடிவிற்கு வந்து விட்டதாக ( அல்லது செல்லாததாகி விட்டதாக) எடுத்துக் கொண்டது.

மார்ச் 21ஆம் தேதி, கர்நாடகா அரசு ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கு முடிவிற்கு வந்து விட்டதாகக் கொண்ட அந்தத் தீர்ப்பின் பகுதியை எதிர்த்து ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. வாதங்கள் முடிவிற்கு வந்து, ஆனால் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு வெகுமுன்னதாகவே குற்றம்சாட்டப்பட்டவரின் மரணம் நிகழ்ந்து விடும் பொழுது, மேல்முறையீட்டைக் கைவிடுவது எனும் பேச்சுக்கே இடமில்லை என்பது தான் எங்களுடையவாதம்.

கர்நாடக அரசு தாக்கல்;                                                                                                                                                                              உச்சநீதிமன்றம் கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை ஏப்ரல் 5ஆம் தேதி தள்ளுபடி செய்ததன் மூலம் அந்தப் பிரச்சனையை முடிவிற்குக் கொண்டு வரும் வாய்ப்பை இழந்து விட்டது. அதன்விளைவாக, நாட்டின் மிக உயர்ந்த மட்ட நீதிமன்றம் என்ன செய்திருக்கிறதென்றால் அரசு ஊழியர்களின் ஊழலுக்கு உதவும் விதமாக ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டது என்பது தான்.

சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளில் பெரும் செல்வத்தைக் குவித்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவெடுக்கிறார் என்று கொண்டால், குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டப்பூர்வமான பிரதிநிதிகள் அல்லது வாரிசுகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியருக்கு எதிரான வழக்கு முடிவிற்கு வந்து விடுவதால், பிற்காலத்தில் சட்ட விரோதமாகச் சேர்க்கப்பட்ட செல்வம், சொத்து ஆகியவற்றின் பலன்களை அனுபவிக்க முடியும். பொது வாழ்வில் ஊழலை ஒழித்துக்கட்டுவதை நோக்கிய பயணத்தில் இதுவொரு பின்னோக்கிய அடி வைப்பாகும்.
முடிவிற்கு வரும் பிரச்சனை

இசைவுடன் தாக்கல்;  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் விதி 136இன் கீழ் அதன் இசைவுடன் தாக்கல் செய்யப்படும் ஒரு கிரிமினல் மேல்முறையீடு குற்றம்சாட்டப்பட்டவர் இறந்து விடும் பொழுது முடிவிற்கு வந்து விடுமா எனும் கேள்விக்கு அப்பாற்பட்டு, இந்தக் குறிப்பிட்ட வழக்கு, வாதங்கள் முடிவிற்கு வந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் மரணம் நிகழ்ந்து விடும் பொழுது முடிவிற்கு வந்து விடுவது குறித்த சமமுக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்புகிறது.

வாதங்கள் முடிவிற்கு வந்த தேதிக்கும், இறுதியாகத் தீர்ப்பு வழங்கப்படும் தேதிக்கும் இடையில் எந்த இடைவெளியும் கிடையாது என்பது ஐயத்திற்கிடமில்லாத முடிவான சட்டம். வாதங்கள் முடிவிற்கு வந்தபிறகு உடனடியாக ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு விடவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் ஒரு தேதியில் தீர்ப்பை அறிவிப்பதென்பது நீதிமன்றத்தின் வசதிக்கானது மட்டும் தான். தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் தேதிக்கும், நடைமுறையில் அது வழங்கப்படும் தேதிக்கும் இடையில் ஏதாவது நிகழுமானால் அது இறுதியாக வழங்கப்படும் தீர்ப்பின் மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது.

குடிமையுரிமைச் செயல்முறை;                                                                                                                                                                           குடிமையுரிமைச் செயல்முறைக் குறியீட்டின்ஆணை XXII விதி 6 (Order xxii Rule 6 of the Code lf Civil Procedure) தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின்னர் மரணம் நிகழ்ந்தால் ஒருமேல் முறையீடு கைவிடப் பட மாட்டாது என்று ஐயத்திற்கிடமற்ற சொற்களில் கூறுகிறது. வழங்கப்படும் அத்தகைய தீர்ப்புவாதங்கள் முடிவிற்கு வந்த தேதியில் வழங்கப்படும் தீர்ப்பைப் போன்ற அதே வலிமையும் விளைவும் கொண்டதாக இருக்கும் என்று அது மேலும் தெளிவுபடுத்துகிறது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகு மரணம் நிகழும் பொழுதுமேல் முறையீடு எந்த விதத்திலும் தள்ளுபடி செய்யப்ப டமாட்டாது என்று பல சிவில் மேல் வழக்கு முறையீடுகளில் இந்த விதியை உச்சநீதிமன்றமே அரசியல் சட்டரீதியாகப் பயன்படுத்தியிருக்கிறது.

ஒரு தேர்தல் மனுவின் வழக்கில் வாதங்கள் முடிவிற்கு வந்ததும் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட பிறகு ஒரு வேட்பாளரின் மரணம் நிகழுமானால் அந்த மரணத்தின் காரணமாக சட்ட நடவடிக்கைகள் முடிவிற்கு வந்து விடாது என்றும் உச்சநீதிமன்ற விதியில் ஏற்பாடு இருக்கிறது.

ஒரு குற்றவியல் மேல்முறையீட்டின் விஷயத்தில் மாறுபட்ட ஒரு பார்வை சாத்தியம் என்று கொள்வதற்கு எந்தவொரு கோட்பாடும் அதிகாரமும் கிடையாது. பொருத்தமான வழக்குகளில் ஒரு சீரான கோட்பாடுகளின் நோக்கத்திற்காக என்றாலும், அரசியல்சட்டத்தின் 136 விதியின்கீழ் சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பதால், உச்சநீதிமன்றத்தின் முன்தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளுக்கு குற்றவியல் நடைமுறைக் குறியீட்டின் விதிகள் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவான வரையறை கொடுத்திருக்கிறது. மேலும், எந்தவொரு மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்வதற்கு உச்சநீதிமன்ற விதிகள் வகைசெய்யவில்லை.ஆகையால், குறிப்பாகத் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதற்குப் பின்னர் மரணம் நிகழ்ந்திருக்கும் ஒருவழக்கில் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்வதற்கு வகை செய்யும் அரசியல் சாசன அல்லது சட்டப்பூர்வமான விதி எதுவும் கிடையாது என்று நிச்சயமாக முடிவிற்கு வர முடியும்.

ஜெயலலிதாவிற்கு எதிரான மேல்முறையீடு முடிவிற்கு வந்துவிட்டது எனும் உச்சநீதிமன்றத்தின் எதிர்பாராத முடிவு மேற்சொன்ன சட்டத்தின் நியதியைப் புறக்கணிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் மரணத்திற்குப் பின்னர் அந்த வழக்கை மேற்கொண்டும் விசாரணை நடத்துவதற்காகத் தேதி எதுவும் குறிக்கப்படவேயில்லை என்பதைக் கவனத்தில் கொள்வதும் பொருத்தமாக இருக்கும்.

பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட கேள்விகள் மீது விவாதங்கள் எதையும் நடத்தாமல் ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கு முடிவிற்கு வந்து விட்டது அல்லது தள்ளுபடியாகி விட்டது என்று நீதிமன்றம் அறிவித்தது. சம்பந்தப்பட்ட தரப்புகளின் வாதங்களைக் கேட்காமலேயே இந்தத் தீர்ப்பு பதிவு செய்யப்பட்டது. நிலவிய சூழலில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இந்தக் கேள்வி மீது வாதிடவும் பொருத்தமானதொரு முடிவிற்கு வரவும் உச்சநீதிமன்றம் குறைந்த பட்சம் ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தால் முறையாக இருந்திருக்கும். இருந்த போதிலும், வாய்வழி விசாரணைக்கான வேண்டுகோளை நிராகரித்து, மறுசீராய்வு மனுவை நீதிமன்றம் தள்ளபடிசெய்தது.

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டபிறகு குற்றம் சாட்டப்பட்டவர் மரணமடைந்ததிலிருந்து எழுந்த சட்டரீதியான விளைவுகள் விவாதத்திற்குள்ளாக்கப்படவில்லை, ஆனால் சட்டம் குறித்த தவறான பார்வையின் அடிப்படையில் மேல் முறையீடு தள்ளுபடி பதிவு செய்யப்பட்டது. இவ்விதமாக சட்டத்தின் சொல்லாடலில் அறிவிக்கையில்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனும் கோட்பாடு- இந்த வழக்கின் உண்மைகளுக்குப் பொருந்தக் கூடியதாகும்.

மறுசீராய்வு மனுவிற்கான காரணங்கள்;                                                                                                                                                                                  ஊடகங்களின் ஒரு பிரிவில், கர்நாடக அரசு விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதா மீது விதித்தரூ. 100 கோடி அபராதத் தொகையை வசூலிக்க வேண்டுமென்ற பேராசையில் அந்த மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது எனும் தவறான மனப்பதிவு உருவாக்கப்பட்டது. வருமானத்திற்குப் புறம்பான சொத்துக்குவிப்பு வழக்கை முதலில் பதிவு செய்தது தமிழ்நாடு அரசாங்கம், அந்தச் சமயத்தில் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை குற்றம்சாட்டப்பட்டதில் பிரதானமானவர் வகித்து வந்ததால் நீதி நடவடிக்கை முறை சீர்குலைக்கப்பட்டு வருகிறது என்று கண்டறியப்பட்டதன் அடிப்படையில் வழக்கை இடமாற்றம் செய்த உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்குப் பின்னர் வழக்கினுள் கர்நாடகா நுழைய வேண்டிவந்தது. அவ்வழக்கை நடத்தும் ஒரே முகமை கர்நாடகா அரசு மட்டுமே என்று உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்குக் கீழ்படிந்து தான் வழக்கை நடத்தும் ஒரே முகமை எனும் தனது பாத்திரத்தை கர்நாடகா வகித்தது, எனவே ஒரு நியாயமான வழக்கு விசாரணை அங்கு நடைபெற்றுவந்தது. அந்த விஷயத்தில் தனிப்பட்ட ஆர்வம் என்று எதுவும் கர்நாடக அரசிற்கு இருக்கவில்லை. வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையும் அதேபோல பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களும் தமிழ்நாட்டிற்குத் தான் செல்லும் கர்நாடகத்திற்கு அல்ல.

உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வழக்காடுதல் தொடர்பாக ஏற்பட்ட செலவினங்களைத் திரும்ப பெற்றுக் கொள்வது மட்டும்தான் கர்நாடக அரசிற்கு இருந்த ஒரே உரிமை. சட்டம் குறித்த ஒரு முக்கியமான கேள்வி தவறாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தோன்றியதால் கர்நாடகா மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. தனது அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டும்தான் அவ்வாறு செய்வதை அது தேர்வு செய்தது.இப்போது அந்த மறுசீராய்வு மனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் வழக்கு தர்க்கரீதியான முடிவை எட்டிவிட்டது. உச்சநீதிமன்றம் தன் மீது சுமத்திய கடமைகளை முறையாக நிறைவேற்றியிருக்கிறோம் என்று அறிந்து கொண்ட மனநிறைவை கர்நாடகா கொள்ளமுடியும்.

பி.வி. ஆச்சார்யா காலம் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா ஆகியவர்கள் சம்பந்தப்பட்ட வருமானத்திற்குப் புறம்பான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், சிறப்பு ஆலோசகராகவும் பணிபுரிந்தவர்.

தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி
நன்றி தி இந்து (ஆங்கிலம்),

Leave A Reply

%d bloggers like this: