இராஜபாளையம்;
இராஜபாளையம் அருகே வீசிய சூறைக்காற்றால் 600 வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வறட்சியில் விவசாயம்; இராஜபாளையம் அருகே கலங்காபேரி பகுதியில் பெருமாள் என்பவர் 2 ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகிறார். கடந்த வருடம் ஜூலையில் இரண்டாயிரம் வாழை மரங்கள் வைத்து வளர்த்து வந்த நிலையில் அனைத்திலும் காய் காய்த்து விட்டது.அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த மரங்களில் செவ்வாயன்று வீசிய சூறாவளி காற்றில் 600க்கும் மேற்பட்ட மரங்கள் குலையுடன் சாய்ந்து விட்டது. கடுமையாக வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் வைத்த வாழை மரத்தில் எப்படியும் காய்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணி இரவு, பகலாக தூங்காமல் இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வந்தார்.

சூறைக்காற்று;                                                                                                                                                                                    செவ்வாயன்று வீசிய சூறை காற்றால் 600 வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. அறுவடைக்கு தயாரான நிலையில் வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் உடனே பார்வையிட்டு இதற்குரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: