ராய்ப்பூர், ஏப்.25-
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய ரத்தத்தை உறைய வைக்கும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 25 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ராய்ப்பூரில் வைக்கப்பட்டிருந்த வீரர்களது உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஆர்பிஎப் வீரர்கள் மீது ரத்
தத்தை உறைய வைக்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். வோயிஸ்ட்டு
களின் கோழைத்தனமான இந்த செயலை, சவாலாக ஏற்று பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேவைப் பட்டால்,  வோயிஸ்ட்டுகள் மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கவும் தயங்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட்டுகள் ஆதிக் கம் நிறைந்த மாநிலங்களுடன், வரும் மே மாதம் 8ந்தேதி ஆலோசனை நடத்தப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். இதைத்தொடர்ந்து, மாவோயிஸ்ட் தாக்குதலில் படுகாயமடைந்து, ராய்ப்பூர் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிஆர்பிஎப் வீரர்கள் 6 பேரை நேரில் சந்தித்து ராஜ்நாத் சிங் ஆறுதல் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.