மாநில நெடுஞ்சாலைகளை நகரச்சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தேசிய , மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சி வசம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதன் படி இதற்கான  தீர்மானத்தை இயற்றி, அதை ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள்  அனுப்பி வைக்குமாறு அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு,  நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் சுற்றறிக்கை  அனுப்பியிருந்தார்.
இதன் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் மூடப்பட்ட 2000 டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்த  உத்தரவை ரத்துசெய்யக்கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும், வழக்கறிஞர் கே.பாலுவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு செவ்வாயன்று(ஏப். 25) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக மாற்றப்பட்ட பிறகு, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்க மாட்டோம என உத்தரவாதம் அரசு அளிக்க முடியுமா என்று அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சாலைகளை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் .ஆனால் அதில் டாஸ்மாக் கடைகளை திறக்க மூன்று மாத காலம் இடைக்கால தடை விதித்து விதித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.