சென்னை,
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 4 தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது திங்களன்று மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தமிழகத்தைச் திருமுருகன், பத்மநாபன், அழகு பாண்டி, செந்தில்குமார் உட்பட 26 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தமிழக வீரர்கள் 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: