திருச்சி;
தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்தும், தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்தை நாசமாக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும் ஏப். 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த பிரச்சாரத்திற்கு ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அழகப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீரமுத்து, பகுதிச் செயலாளர் பல்டோனா, சிஐடியு மாவட்டத் தலைவர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: