பெரம்பலூர்;
தொடக்கக்கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாய விலைக் கடைகளில் மாநிலம் முழுவதும் பணியாற்றி வரும் சுமார் 45 ஆயிரம் பணியாளர்களுக்கு ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள தொடக்க கூட்டுறவு சங்கம் மற்றும் நியாய விலைக் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள 291 ரேசன் கடைகள், 53 தொடக்கக் கூட்டுறவு வங்கிகளை மூடி விட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் 450 ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 93 பேர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.