சென்னை, ஏப். 23 –
போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமையன்று (ஏப்.22) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கி.நடராஜன், சண்முகம் (எல்பிஎப்), அ.சவுந்தரராசன், ஆறுமுகநயினார் (சிஐடியு), கஜேந்திரன் (ஏஐடியுசி), மா.சுப்பிரமணியன் (எச்எம்எஸ்), ஷாஜகான் (டிடிஎஸ்எப்), கோவிந்தசாமி (டிஎம்டி எஸ்பி) முத்துக்குமார் (பிடிஎஸ்), வெங்கடேசன் (எம்எல்ஏப்), வேலு (ஏஏஎல்எப்), செல்வராஜ் (டிடபிள்யூயு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாக்கி, அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதற்கு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையேயான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டு, கழகங்கள் செலவு செய்துள்ள 6 ஆயிரம் கோடி ரூபாயையும் மாநில அரசு வழங்க வேண்டும். புதிய பேருந்துகளை இயக்க நிதி ஒதுக்க வேண்டும்.

இவற்றை நிறைவேற்றுவதற்கான நிதியை அரசு ஒதுக்காததையும், வேலை நிறுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் 7 மையங்களில் ஆயத்த மாநாடு நடைபெறும். இதன்படி, மே 5 அன்று விழுப்புரத்திலும், 9 அன்று திருப்பூரிலும், 11 அன்று சேலத்திலும், 13 அன்று திருச்சியிலும், 15 அன்று திருநெல்வேலியிலும், 16 அன்று மதுரையிலும், 19 அன்று சென்னையிலும் நடைபெறும்.

ஏப்.25 முழு அடைப்பில் பங்கேற்பு
மத்திய – மாநில அரசுகளைக் கண்டித்தும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் ஒன்றுகூடி எடுத்த முடிவின் அடிப்படையிலும், தமிழகத்தின் அரசியல் இயக்கங்கள் அறிவித்து
ள்ளதன் அடிப்படையிலும் ஏப்.25 அன்று நடைபெறவுள்ள பொதுவேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பில் தமிழக போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கலந்து கொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply