தில்லி ,

தில்லி கால்கஞ்ச் பகுதியில் பசுக்களை கடத்தியதாக சந்தேகப்பட்டு மூவரை பசு பாதுகாவலர்கள் அத்துமீறி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள கால்காஞ் பகுதியில் ரிஸ்வான் (25) , அசு (28) மற்றும் கமில் (25) ஆகிய மூன்று பேரும் எருமைமாடுகளை டிராக்டர் மூலம் காஞ்பூர் சந்தைக்கு கொண்டு சென்றுள்ளனர் . ஆனால் மூவரும் பசுக்களை கடத்துவதாக சந்தேகமடைந்த பசு பாதுகாவலர்கள் , அவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மூவரும் தில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.