கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புச் சட்டத்தின் 15 மற்றும் 16வது பிரிவின்படி பொது செயலாளர், மாநில மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு ஒரு தோழர் மூன்று முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
சிஐடியு விவசாயிகள் சங்கம் மற்றும் ஏனைய வெகுஜன அமைப்புகளுக்கும் இந்த கொள்கை பொருந்துமா? கட்சியின் நிலைப்பாடு இப்பிரச்சனையில் என்ன என்பதை விளக்கவும்!
-ஹாஸ்ரீலால் சர்மா/ சிகார்/ இராஜஸ்தான்
பதில்: கட்சியில் செயலாளர் பொறுப்பில் ஒருவர் மூன்று முறைக்கு மேல் இருக்க முடியாது எனும் வரையறையை கட்சி அமைப்புச் சட்டம் வகுத்துள்ளது. இது பொதுச் செயலாளர், மாநிலச் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் இடைக்குழு செயலாளர் வரை பொருந்தும். 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோழிக்கோட்டில் நடந்த அகில இந்திய மாநாட்டில் இந்த திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வரையறை என்பது கட்சிப் பொறுப்புக்குத்தான் பொருந்தும். சிஐடியு விவசாயிகள் சங்கம், வாலிபர் சங்கம் போன்ற வர்க்க வெகுஜன அமைப்புகளுக்கு தனியாக அமைப்புச் சட்டமும் விதிகளும் உள்ளன. அந்த விதிகள்தான் அவைகளுக்கு பொருந்தும். அவை சுயேச்சையான அமைப்புகள். தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்வதற்கு என அவைகளுக்கு தனியாக சட்டவிதிகள் உள்ளன.
அதன்படிதான் பொறுப்புகளுக்கு தேர்வு நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த அமைப்புகளின் தேர்தல் குறித்து முடிவு செய்ய முடியாது.
உதாரணத்திற்கு மாதர் சங்கம் தனது பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் பொறுப்புகளுக்கு மூன்று முறைக்கு மேல் ஒருவர் இருக்க இயலாது எனும் விதியை கட்சி அத்தகைய முடிவு எடுப்பதற்கு முன்பாகவே நடைமுறைப்படுத்தி வந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.