தில்லி ,

காங்கிரச் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை  விமர்சனம் செய்த அக்கட்சியின் தில்லி மகளிரணி தலைவர் பர்க்கா சுக்லா சிங் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியை தலைமையேற்று வழிநடத்த மனதளவில் தகுதி இல்லாதவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியின் தில்லி மகளிரணி தலைவர் பர்க்கா சுக்லா சிங் விமர்சனம்  செய்திருந்தார்.மேலும் அவர் , ராகுல் காந்தி பிற கட்சி தலைவர்களை சந்திக்கவும் அவர்களது கேள்விகளை எதிர்கொள்ளவும் அஞ்சுகிறார். மகளிர் பாதுகாப்பு , அதிகாரம் என்பதெல்லாம் காங்கிரஸின் வாக்கு சேகரிக்கும் உத்தி மட்டுமே. கட்சியில் உள்ளவர்கள் மகளிரணியினரிடம் தவறாக நடக்கும் நிலையில் புகார் செய்தால் ராகுல் காந்தி அதை கண்டு கொள்வதில்லை என கூறியிருந்தார். வியாழனன்று தில்லி மகளிரணி தலைவர் பதவியில் இருந்து விலகிய பர்க்கா சுக்லா சிங் , இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

Leave A Reply