ஜெய்பூர்,
மந்திர சக்தி சொன்னதாக 4 மாத குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப் நகரில் உள்ள வீடு ஒன்றின் நீர்த்தொட்டியில், நான்கு மாத குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன் குழந்தையை தன்னிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடியதாக தெரிவித்தார். ஆனால் வீட்டிற்குள் வெளியாட்கள் யாரும் வந்து சென்றதற்கான எந்த தடயமும் காணப்படவில்லை. மேலும் குழந்தை இறந்து கிடந்த நீர்த் தொட்டியின் சாவியும் பிங்கியுடமே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பிங்கியிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் போது குழந்தையை நீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததது தெரிய வந்தது.  சில மந்திர சக்தி வந்து தன் மகளை கொல்லச் சொன்னதால், இந்த செயலை செய்ததாக பிங்கி வாக்குமூலம் அளித்துள்ளார். தனது மகளின் மரணம், தனது கணவர் மற்றும் 4 வயது மகனுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிங்கி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave A Reply