சென்னை,
நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல என்று நடிகர் சத்திய ராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டில் நடந்த காவிரி பிரச்னை போராட்டத்தின்போது வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகளை நடிகர் சத்யராஜ் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில், சத்யராஜ் நடித்த திரைப்படங்களை கர்நாடகாவில் வெளியிடவிட மாட்டோம் என கன்னட அமைப்புகள் தற்போது கூறியுள்ளன. பாகுபலியின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் கர்நாடகாவில் அந்தப்படத்தை வெளியிட எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு வாட்டாள் நாகராஜையும், கன்னடர்கள் பற்றியும் தான் பேசியதற்கு, மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே கடந்த 35 வருடங்களாக எனது உதவியாளராக உள்ள சேகர் என்பவரின் தாய்மொழி கன்னடம். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காவிரி பிரச்சனை போராட்டத்தை தொடர்ந்து கர்நாடகாவில் பாகுபலி பாகம் 1 உட்பட சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகி உள்ளன எந்த பிரச்சனையும் எழவில்லை சில கன்னட படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்கவில்லை. 3 வருடங்களுக்கு முன் நான் கண்டன கூட்டத்தில் பேசியதை யூ டியூப்பில் பார்த்ததாகவும் அதில் பேசியுள்ள வார்த்தைகள் கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அவர்கள் கருதுவதாலும் அந்த சில வார்த்தைகளுக்காக 9 வருடங்களுக்கு பிறகு நான் கன்னட மக்களிடம் எனது மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும்   அந்த வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:

 

Leave A Reply