திருப்பதி,
திருப்பதி அருகே சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி அருகே ஏர்பேடு பகுதியில் உள்ள கட்டுப்பாட்டை இழந்த லாரி கடைகளுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்துள்ள 10க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அஞ்சப்படுகிறது.  இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply