தில்லி ,

பிரிட்டனில் இருக்கும் கோஹினூர் வைரத்தை மீட்பது தொடர்பாகவோ அல்லது ஏலம் விடுவது தொடர்பாகவோ எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆல் இந்தியா ஹியூமன் ரைட்ஸ் அண்டு சோஷியல் ஜஸ்டிஸ் பிரன்ட் என்ற அமைப்பு , பிரிட்டனில் இருக்கும் கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ். கேஹார் தலைமையிலான அமர்வு, பிரிட்டனில் இருக்கும் ஒரு பொருள் தொடர்பாக இந்திய நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பு சொல்ல முடியும். அதோபோல் , அந்த பொருளை ஏலம் விடக்கூடாது என அந்நாட்டிற்கு எவ்வாறு  உத்தரவிட இயலும் என கேள்வி எழுப்பினர். பின்னர் அவர்கள் , வெளிநாட்டு அரசாங்கத்திற்கு நாம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது . மேலும் இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணம் பத்திரத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் , பிரிட்டன் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே இத்தகைய மனுக்கள் தேவையற்றது என கூரிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave A Reply