விருதுநகர்,
ராஜபாளையம் அருகே ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகரில் ராஜபாளையம் கீழஆவாரம்பட்டியைச் சேர்ந்த பதினெட்டாம்படியான் இவரது மனைவி பானுமதி. இவருக்கு ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் 4  ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் ஆா்.எம்.முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply