புதுதில்லி,
ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்சநீதி மன்ற உத்தரவைத் தொடர்ந்தும் ஆதாரைக் கட்டாயமாக்கியது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
ஆதார் எண்ணை நலத்திட்ட உதவிகள் வழங்க கட்டாயமாக்கக் கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து நலத்திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் என்று வெளிப்படையாக கூறி வருகிறது. இதுகுறித்து இன்று வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மத்திய அரசு ஆதாரை ஏன் கட்டாயமாக்கி உள்ளது என்று கேள்வி எழுப்பி உள்ளது.

Leave A Reply