புதுக்கோட்டை, ஏப்.20-
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில் மோடியின் உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் மூழ்கடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக் கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒப்புதல் அளித் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல் லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்ற மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்றும், பள்ளி மாணவர்களின் தேர்வைக் கணக்கில் கொண்டும் கடந்த மார்ச் 9-ம் தேதி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக் குழுவினர் அறி
வித்தனர். அதே நேரத்தில், நல்லாண்டார்கொல்லை மற்றும் வடகாட்டில் போராட்டம் தொடர்ந்தது.

மாவட்ட ஆட்சியரின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த இடங்களிலும் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், விவசாயிகளிடம் உறுதியளித்ததற்கு மாறாக, மத்திய அரசு நெடுவாசல் உள்ளிட்ட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களுடன் கையெழுத்திட்டது. இது தமிழக விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக விவசாயிகள் பல்வேறு நூதன வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒன்பதாவது நாளாக வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நெடுவாசல் கடைவீதியில் வைத்து மோடியின் உருவபொம் மையை வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பின் னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் மோடியின் உருவ பொம்மையை மூழ்கடித்து மோடிக்கு எதிராகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டம் அந்தப் பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Leave A Reply