திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பெரம்பலூர் மாவட்டம் நோக்கிச் சென்றது.

லாரியை செங்கோட்டையைச் சேர்ந்த ராஜன் என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த லாரி திருவள்ளூரைக் கடந்து மணவாளநகர் அருகே பட்டரை என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தபோது லாரியில் இருந்த வைக்கோல் திடீரென தீப்பற்றி எரிந்தது.

ஆனால் இதை அறியாமல் ஓட்டுனர் லாரியைத் தொடர்ந்து ஓட்டிச்சென்றுள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தசிலர் லாரியைமடக்கி தகவல் தந்தன்பேரில் ஓட்டுனர் ராஜன் அந்த லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கித் தப்பினார். இதனைத் தொடர்ந்து தகவலறிந்துவந்த திருவள்ளூர் தீயணைப்புப் பபடையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்து காரணமாக திருவள்ளூர் திருப்பெரும்புதூர் மார்க்கத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்துகுறித்து மணவாளநகர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave A Reply