புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு வந்த தருண் விஜய்க்கு கடும்  எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொள்ள முன்னாள் பாஜக அமைச்சர் தருண் விஜய் இன்று பல்கலைகழகம் வருகை தந்தார். பின்னர் விழாவில் அமர்ந்திருந்த பெருவாரியான மாணவர்கள் திடீரென எழுந்து தென் மாநிலங்களை சேர்ந்தவர்களை கருப்பர்கள் என்றும், அவர்களுடன் எல்லாம் நாங்கள் இணைந்து வாழவில்லையா என்று நிறத்தின் பேரில் இழிவு படுத்திய தருண்விஜயே திரும்பி போ என மாணர்கள் கோஷம் போட்டனர்.

இதனைத் தொடர்ந்து விழா அரங்கிற்குள் நுழைந்த காவல்துறையினர், மாணவ,மாணவிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். இதில் சில மாணவிகளின் ஆடைகளை காவல்துறையினர் கிழித்தனர். பின்னர் கடும் பாதுகாப்புடன், தருண் விஜய் அனுப்பி வைக்கப்பட்டார்.

சில வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய தருண் விஜய், “நிற வெறி கொண்டவர்கள் இந்தியர்கள் என கருதுவது தவறு. எங்களுக்கு நிறவெறி இருந்தால், எப்படி கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சுமூகமாக வாழ முடியும்?” என கருத்து தெரிவித்திருந்தார். தருண் விஜயின் இந்த கருத்துக்கு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply