தருமபுரி,
நீட்தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி, கல்விஉரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில்  தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் பி.எம். கௌரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கு.தியாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் எஸ்.கேசவன் மைதிலி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை  பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் துரைராஜ், மாவட்டச் செயலாளர் சின்னகண்ணன், மகளிரணி செயலாளர் ச.கவிதா, தலைமை ஆசிரியர் கழகத் தலைவர் தன்ராஜ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர்.

இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பிரசாந்த், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் நாகைபாலு, தமிழ் நாடு அறிவியல் இயக்கச்  செயலாளர் சுசில்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

Leave A Reply