மன்னார்குடி

தியாகி களப்பால் குப்புவின் 69வது நி்னைவு தினம் களப்பாலில் கடைபிடிக்கப்பட்டது. நினைவாஞ்சலி நிகழ்ச்சிகளில் மாவட்டக்குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமாரராஜா, தியாகி களப்பால் குப்புவின் புதல்வரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே. கணேசன், புதல்வர்கள் கட்சி உறுப்பினர்கள் ஏ.கே. பக்கிரிசாமி, ஏ.கே. சிவஞானம், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எல் சன்முகவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.எம். சன்முகசுந்தரம் மற்றும் கோட்டூர் ஒன்றிய கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தியாகியின் நினைவுவிடத்தில் உள்ள திருவுருவ சிலையில் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தலைவர்கள் மலராஞ்சலிக்கு பிறகு களப்பால் கடைத்தெருவிலும் களப்பால் பள்ளிக்கூடத்திற்கு அருகிலும் கட்சிக்கொடிகள் ஏற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் திரண்டிருந்த கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் மத்தியில் தியாகி களப்பால் குப்புவின் தியாக வரலாற்றை எடுத்துரைத்து நினைவாஞ்சலி உரையாற்றினார்.

Leave A Reply