கள்ளக்குறிச்சி: கலை, அறிவியல், கல்வியியல், பாராமெடிக்கல் கல்லூரிகளில் அநியாய கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ் தனியார் கல்லூரியின் இந்திய மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
இக்கல்லூரியின் எஸ்எப்ஐ மாநாடு கள்ளக்குறிச்சியில் புதனன்று மாலை (ஏப்ரல் 19) அல்ஹாம் தலைமையில் நடைபெற்றது. எஸ்.சூர்யா வரவேற்றும், ராஜேஸ்வரி அஞ்சலி தெரிவித்தும் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் துரைஅருணன் மாநாட்டை துவக்கி வைத்தார்.
தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிரான நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கான ஜனநாயக உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மு.சிவக்குமார் நிறைவு செய்து பேசினார்.
8 நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. தலைவராக வி.வெள்ளியங்கிரி, செயலாளராக கே.வி.ஸ்ரீபத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சூர்யா நன்றி கூறினார்.

Leave A Reply