வேலூர்,
தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் வேலூரில் மாநிலத் தலைவர் செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஆர்.வேலுச்சாமி, மாநில நிர்வாகிகள் டிஏ.லதா, ஹைடா ஹெலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிக ளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில்  தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திரளாக பங்கேற்பது என்று  இந்த கூட்டத்தில் முடிவு

செய்யப்பட்டது.
தையல் கூட்டுறவு மூலம் கடந்த ஆண்டு வழங்க வேண்டிய தையல் கூலியை  உடனே வழங்க வேண்டும், நலவாரியத்தில் நிலுவையில் உள்ள  பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

தையல் கூட்டுறவு மூலம் தைக்க வழங்கப்பட்ட பள்ளி சீருடைகள் தைக்கும் முன்பே நைந்து கிழிந்து போயுள்ளது. பல ஆண்டுகளாக கிடங்கில் கிடப்பில் இருந்த பழைய துணிகளின் மூலம் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன் தரமான பள்ளிச்சீருடைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply