கோவை,
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஓதுக்கீட்டை உயர் நீதி மன்ற உத்தரவின்படி தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பிற்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதி்ர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் இன்று இரண்டு மணி நேரம் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஓரு பகுதியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களும் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ மேற்படிப்பிற்கு 25 வருடங்களாக வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு தொடரவேண்டும் எனவும் மாநில அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். அவசர சட்டம் மூலமாக இந்த இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டும் எனவும் இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்த போவதாகவும் தெரிவித்தனர். இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்லாத நிலையும் ஏற்படும் என ஆர்ப்பாட்டம் நடத்திய மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் பணி புறக்கணிப்பால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர்..

Leave A Reply